செஞ்சோலை படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யேர்மன் ANF NEWS என்கின்ற இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

279 0

 

செஞ்சோலை படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஜேர்மனியின் பேர்லின், கம்பேர்க், சோலிங்கன் ஆகிய நகரங்களில் நடைபெற்றன. இங்கு கவனயீர்ப்புக் கண்காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், இளையோர்களால் பல்லின மக்களுக்கு யேர்மன் மொழியில் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. அத்துடன் ஈன இரக்கமற்ற சிங்கள பேரினவாத அரசின் செஞ்சோலை படுகொலை பற்றிய பதிவுகளும் யேர்மன் மொழியில் வாசிக்கப்பட்டது.
இந் நினைவேந்தல் நிகழ்வுகள் யேர்மன் ANF NEWS என்கின்ற இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

ANF | Sencholai-Massaker: Gedenkveranstaltungen Berlin, Hamburg und Solingen (anfdeutsch.com)