லொறியொன்றில் சட்டவிரோதமாக பெற்றோலைக் கடத்த முயன்ற மூவர் கைது

230 0

வாரியாபொல பகுதியிலிருந்து கற்பிட்டி பகுதிக்கு அனுமதிப்பத்திரமில்லாமல் சட்டவிரோதமாக பெற்றோலை லொறியொன்றில் கொண்டு செல்ல முற்பட்ட மூவர் கற்பிட்டி கடற்படைப் புலனாய்வுப் பிரிவினரால் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை செய்யப்பட்டுள்ளனர்.

வாரியாபொல பகுதியிலிருந்து கற்பிட்டிக்கு பெற்றோலை அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுவதாக கற்பிட்டி கடற்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய கற்பிட்டி மீன் வாடியில் வைத்து குறித்த லொறியை மறைத்து சோதனைகளுக்கு உற்படுத்தியுள்ளனர்.

இதன்போது 2030 லீற்றர் பெற்றோல் கைப்பற்றபட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் மூவர் கடற்படைப் புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கற்பிட்டி, வாரியபொல, ரத்மலான பகுதிகளைச் சேர்ந்தவர்களென கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் பெற்றோல் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய லொறி ஆகியவை மேலதிக நடவடிக்கைகளுக்காக கற்பிட்டிப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதக இதன்போது தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவித்தனர்.