அம்பலாங்கொடை பகுதியில் துப்பாக்கிச் சூடு : இருவர் பலி : இருவர் படுகாயம்

118 0

அம்பலாங்கொடை,  தெல்துவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு குறித்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பலாங்கொடை தெல்துவ பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியில் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.