மாணவனை தாக்கிய அதிபரை கைது செய்ய விசாரணை

312 0

மெதிரிகிரிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், குறித்த அதிபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த அதிபர் கடந்த 8ஆம் திகதி மாணவர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான மாணவர் மெதிரிகிரிய மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான மாணவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தமது சகோதரனை பாடசாலையில் அனுமதித்ததன் பின்னர், திரும்பிச் செல்லும் வழியில் எதுவித காரணமும் இன்றி மாணவர் மீது அதிபரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.