பௌத்த மதத்திற்கான முன்னுரிமை குறைக்கப்பட்டால் எதிர்ப்பேன் – மனோ கணேசன்

373 0

புதிய அரசியல் அமைப்பின் மூலம், பௌத்த மதத்திற்கு வழங்கப்படுகின்ற முன்னுரிமை குறைக்கப்படும் பட்சத்தில், அதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் பெல்லன்வெல விமலரட்ன தேரருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் நல்லிணக்கத்திற்கான நிறுவனம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.