மாகாண சபைக்கான அதிகாரங்கள் வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பட்சத்தில், அதற்கு தமது எதிர்ப்பபை வெளியிடுவதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
கண்டியில் இன்ற இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.
மாகாண சபைக்கு உள்ள அதிகாரங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்குவது தொடர்பிலான தகவல் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே, முதலமைச்சர் இதனை தெரிவித்தார்.
மாகாண சபைக்கான அதிகாரங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்குவதற்கு எதிராக நேற்றைய தினம் வடக்கு மாகாண சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
வடக்கு மாகாண சபை முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் இந்த தீர்மானத்தை சமர்ப்பித்தார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால், கடந்த 1985ஆம் ஆண்டு மாகாண சபைகளுக்கு வழங்கிய அனைத்து அபிவிருத்தி தொடர்பான அதிகாரங்களும் இந்த மாதம் முதலாம் திகதி முதல் மீள பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

