குருணாகல் ரிதீகமயில் நீரில் மூழ்கி 16 வயது சிறுவன் உயிரிழப்பு

104 0

குருணாகல் ரிதீகம, ஓகொடோபொல மஹாய கால்வாயில் மூழ்கி 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ரித்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்கள் குழுவுடன் நீராடச் சென்ற வேளையில் குறித்த சிறுவன் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் நீரில் மூழ்கிய சிறுவனை கோனியாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்க்ப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் பொல்கொல்ல பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொகரெல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றிற்கு விளையாட்டுப் போட்டிக்காக சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்கள், நீராடச் செல்ல முற்பட்ட பின்னர் கால்வாயில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.