மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் நாளை ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமையவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்போது மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமந்த ஆனந்த குறிப்பிட்டார்.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான செயல்பாடுகள் மூலம் நாட்டின் மருத்துவ துறையில் ஏற்படும் பாதக தன்மைகள் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கம் அளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

