கல்விக்காக ஒதுக்கப்படுகின்ற நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
கடந்த பாதீட்டின் போது பெருமளவான நிதி கல்வி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டது.
அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியானது அதிக அளவில் பயன்படுத்தப்படாத நிலையில், அந்த நிதியை வேறு துறைகளுக்கு பயன்படுத்துவதற்கான அனுமதியினை மாகாண சபைகள் கோரியிருந்தன.
எனினும் பாடசாலைகளுக்கு செல்கின்றபோது பாடசாலைகளில் சுகாதார அடிப்படையிலான வசதிகள் இல்லை என நிர்வாகத்தரப்பினர் முறைப்பாடு செய்கின்றனர்.
எனவே, கல்விக்காக ஒதுக்கப்படுகின்ற நிதி எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பில் கல்விதுறைசார் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.

