துறைமுக நகர் திட்டம் – கடற்றொழிலுக்கு பாதிப்பில்லை

400 0

துறைமுக நகர திட்டத்தின் காரணமாக கடற்றொழில் பாதிக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என கடற்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

துறைமுக நகர திட்டத்தினால் மேல் மற்றும் தென் கடற் பிரதேசங்களில் கடற்தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் முழுமையான அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வுகளின் அடிப்படையில் துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தினால் கடற்தொழில் செயற்பாடுகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதென்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துறைமுக நகரத்திற்கு மணல் பெற்றுக்கொள்ளும் பணிகள் கரையில் இருந்து 10 கிலோமீற்றர் தொலைவில் மேற்கொள்ளப்படுகின்றது.

எனவே இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கும் தாவரங்களுக்கும் பாதிப்பு ஏற்படாது என நாரா அமைப்பின் ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.