எரிபொருள் விநியோகத்திற்கு புதிய நிறுவனம்?

16 0

பெற்றோலிய உற்பத்தி, இறக்குமதி, விநியோகம் மற்றும் விற்பனைக்கு பொருத்தமான நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இது தொடர்பான குழு நேற்று நியமிக்கப்பட்டதாக அமைச்சர் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்காலத்தில் சிபெட்கோ மற்றும் லங்கா ஐ.ஓ.சி ஆகிய நிறுவனங்களுடன் இலங்கையின் பெற்றோலியத் தொழிலில் ஈடுபட பல நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.