ஊடகங்களில் பிழையான செய்தி வெளியிடப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
சிங்கள பத்திரிகை ஒன்றில் பிரசூரமான செய்தியினால் தமது வரப்பிரசாதம் மீறப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் பிழையான செய்திகளை குறித்த ஊடகம் வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த பிழையான செய்திக்கு ஊடகங்கள் வழங்கிய முன்னுரிமை அதனை திருத்தி வெளியிடும் போதும் வழங்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுரத்த ஹேரத்திற்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தொடர்பில் பிழையான செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

