குறும் படப் போட்டியில் நுவரெலியாவின் பாத்தும் மஹாகம சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்

220 0

சர்வதேச அளவில் ஒளிப்பதிவை விரும்பும் தென்னிந்தியாவினால் நடத்தப்பட்ட குறும்படப் போட்டியில் இலங்கை சார்பில் கலந்து கொண்ட நுவரெலியாவைச் சேர்ந்த புதுமுகம் பாத்தும் மஹாகம சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.


அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச குறும்படப் போட்டியான இண்டி ஷோர்ட்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் 2022 இன் இறுதிச் சுற்றில் இலங்கையின் பாத்தும் மஹாகம சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

 

 

 

 

 

 

சச்சின் செந்தில்குமாரன் மற்றும் பாத்தும் மஹாகம இணைந்து இயக்கிய ‘முகம்’ என்ற குறும் படத்தில் நடித்ததற்காக அவர் இந்த விருதை வென்றிருப்பது இலங்கை குறும்படத்துறைக்கும் வளர்ந்து வரும் கலைஞருக்கும் கிடைத்த கெளரவமாகும்.
பாத்தும் மஹாகம அவர்களே எழுதிய 10 நிமிட குறும் படத்தில் உரையாடல் இல்லை என்பதும் சிறப்பு.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக பீடத்தின் இறுதி வருட மாணவரான பாத்தும், வர்த்தகரும் ஊடகவியலாளருமான சந்திரசிறி மஹாகமவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது