இலங்கையின் பாதுகாப்பு பொருளாதர நிலவரம் குறித்து பிரிட்டனின் தென்னாசியா பொதுநலவாயம் மற்றும் ஐக்கிய நாடுகளிற்கான அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசி உரையாடெலொன்றை மேற்கொண்டுள்ளார்.
டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ள அமைச்சர் தாரிக் அஹமட் இலங்கையின் பாதுகாப்பு மற்றும்பொருளாதார நிலை தொடர்பில் அந்த நாட்டு ஜனாதிபதியுடன் ஆக்கபூர்வமான உரையாடலை மேற்கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கான உரிமை ஊடக சுதந்திரம் மனித உரிமை நீதி போன்றவை குறித்து தொலைபேசி உரையாடலில் கவனம் செலுத்தியதாக பிரிட்டனின் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்த சவால்களை எதிர்கொள்வதற்கு பிரிட்டன் உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

