அடுத்த பாராளுமன்றில் 22 ஆவது திருத்த வரைவு : 19 இற்கு அப்பால் செல்லவும் தயார் : நீதி அமைச்சர் விஜயதாச

192 0

அடுத்த பாராளுமன்ற அமர்வின்போது 22ஆவது திருத்தச்சட்ட வரைவு சபையில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ள நீதிரூபவ் அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் விவகார அமைச்சர் கலாநிதி.விஜயதாச ராஜபக்ஷ 19ஆவது திருத்தத்திற்கும் அப்பால் செல்வதற்கு தயார் என்று அறிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இடைக்கால அமைச்சரவையின் நேற்றைய நியமனத்தின்போது நீதிரூபவ் அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் விவகார அமைச்சைப் பொறுப்பேற்றுக்கொண்ட கலாநிதி.விஜயதாச ராஜபக்ஷ அடுத்தகட்டச் செயற்பாடுகள் தொடர்பில்   கருத்து வெளியிட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்ரூபவ் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு 22ஆவது திருத்தச்சட்ட மூலத்திற்கான வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவினை அடுத்த பாராளுமன்ற அமர்வில் சபையில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. குறித்த வரைவில் மேலும் திருத்தங்களைச் செய்வதற்கும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

மேலும்ரூபவ் தற்போதுள்ள அரசியல் நிலைமைகளின் பிரகாரம்ரூபவ் 22ஆவது திருத்தச்சட்ட மூலத்திற்கான வரைவில் மேலும் திருத்தங்களைச் செய்வதற்கு தயாராகவே உள்ளோம். குறிப்பாக அத்திருத்தங்கள் 19ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் செல்வதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

இந்தச் செயற்பாட்டினை நடைமுறைச்சாத்தியமாக்குவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று கோருகின்றேன் என்றார்.

தற்போது முகங்கொடுக்க நேர்ந்துள்ள நெருக்கடி நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்திற்கும் இடையில் அதிகாரச் சமநிலையை ஏற்படுத்தும் வகையில் பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் கூட்டாகப் பொறுப்புக் கூறும் அமைச்சரவைக்கும் மற்றும் அரசியலமைப்புப் பேரவைக்கும் ஒருசில அதிகாரங்களை ஒப்படைக்கும் வகையிலும் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வது பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டு அமைச்சர் விஜதாசவினால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படைச் சட்டமூலத்திற்கு கடந்த மாதம் 20ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.