வயோதிபரின் கடையில் கைவரிசை காட்டிய திருடன்

204 0

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் வயோதிபரின் கடையில் திருட்டில் ஈடுபட்ட நபரை உதயநகர் பகுதி மக்கள் பிடித்து  தாக்கியுள்ளனர்.

குறித்த கடையில் வயோதிப பெண்ணிடம் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்து தருமாறு கேட்க அவர் தண்ணீர் எடுத்து வர சென்றபோது கடை அலுமாரிக்குள் இருந்த பணத்தை திருடிக்கொண்டு ஓடிய வேளை குறித்த நபர் மக்களால் விரட்டி பிடிக்கப்பட்டுள்ளார்.