வடமேல் (வயம்ப) பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரின் தாக்குதலுக்கு இலக்காகி மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அப் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான வாசிகசாலைக்கு முன்னால் வைத்தே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் காயமடைந்த மாணவர்கள் 23, 24 மற்றும் 25 வயதானவர்களாகும். சம்பவம் தொடர்பில் குறித்த மாணவர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய பன்னல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

