தொற்றா நோய்களைத் தடுக்க விஷேட வேலைத் திட்டம்

317 0

தொற்றா நோய்களால் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பது குறித்த விஷேட வேலைத் திட்டங்கள் சிலவற்றை செயற்படுத்தவுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் தலைமையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

தேசிய மட்டத்திலான திறமையை வௌிப்படுத்தும் விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு முன்னுரிமையளித்து, பாடசாலை விளையாட்டு ஆலோசகர்கள் 3800 பேரை நியமிக்க தேவையான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.