காத்­தான்­குடி மீரா­பா­லிகா மகா வித்­தி­யா­ல­யத்தில் மாணவன் ஒரு­வனை தாக்­கிய ஆசி­ரி­ய­ருக்கு விளக்க மறியல்

271 0

மட்­டக்­க­ளப்பு காத்­தான்­குடி பொலிஸ் பிரி­வி­லுள்ள காத்­தான்­குடி மீரா­பா­லிகா மகா வித்­தி­யா­ல­யத்தில் மாணவன் ஒரு­வனை தாக்­கிய ஆசி­யரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்க மறி­யலில் வைக்­கு­மாறு மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்ற நீதிபதி எம்.கணே­ச­ராஜா உத்­த­ர­விட்டார்.

கடந்த முதலாம் திகதி காத்­தான்­குடி மீரா­பா­லிகா மகா வித்­தி­யா­ல­யத்தில் 3 ஆம் தரத்தில் கல்வி கற்கும் ரி.ஸம்றி அகமட் எனும் மாண­வனை வகுப்­பா­சி­ரி­ய­ரான எஸ்.ரஸீட் என்­பவர் பாட­சா­லையில் வைத்து தாக்­கி­யதில் அம் மாணவன் காயங்­க­ளுக்­குள்­ளான நிலையில் காத்­தான்­குடி ஆதார வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு பின்னர் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­யசா­லைக்கு மாற்­றப்­பட்டு அங்கு சிகிச்சை பெற்று வரு­கின்றார்.

மாண­வனை தாக்­கிய குறித்த ஆசி­ரி­யரை காத்­தான்­குடி பொலிஸார் தேடி வந்த நிலையில் அவ்­வா­சி­ரியர் நேற்று திங்­கட்­கி­ழமை காத்­தான்­குடி பொலிஸ் நிலை­யத்தில் சர­ண­டைந்தார்.

இவ­ரிடம் விசா­ர­ணை­களை மேற் கொண்ட காத்­தான்­குடி பொலிஸார், நேற்று திங்­கட்­கி­ழமை மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்­றத்தில் நீதிபதி எம்.கணே­ச­ராஜா முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­திய போது குறித்த ஆசி­ரி­யரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்க மறி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்­டுள்ளார்.

தாக்­கப்­பட்ட மாண­வனின் சார்பில் இதன் போது ஆஜரான சட்டத்தரணி எஸ்.எச்.எம்.றிஸ்வி, இம்மாணவன் தாக்கப்பட்டு காயங்களுக்காளான புகைப்படங்களையும் நீதிவானிடம் காண்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.