சந்திரிக்காவுக்கு என்னிடம் நல்ல பதில் உள்ளது- மஹிந்த

242 0

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தன்னைப் பற்றித் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து பதிலளிக்கவே வேண்டும் என எதிர்பார்ப்பதாயின் தன்னிடம் அதற்குத் தேவையான நல்ல பதில்கள் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

அவர் என்னைப் பற்றிக் கூறியுள்ளவற்றுக்கு நான் பதிலளிப்பேன். உடனடியாக பதிலளிக்குமாறு அவர் வேண்டுவாராயின் அதற்கும் நான் தயாராகவே உள்ளேன் எனவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.