முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிற்கு பிணை வழங்குவது குறித்து இன்று நீதிமன்றில் பரிசீலனை செய்யப்பட உள்ளது.
ரக்கர் வீரர் வசிம் தாஜூடீன் படுகொலை சம்பவம் தொடர்பில் அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்
பிணை வழங்குமாறு கோரி சட்டத்தரணிகள் ஊடாக அனுர சேனாநாயக்க நேற்று மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தொடர்பில் நாளை பரிசீலனை செய்யப்படும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக்க அறிவித்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைகளில் சட்ட மா அதிபர் திணைக்களத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதி சொலிசுட்டர் ஜெனரல் நேற்றைய வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகியிருக்கவில்லை.
இதன் காரணமாக மனுவை நாளை பரிசீலனை செய்ய நீதிபதி தீர்மானித்திருந்தார்.
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுரசேனாநாயக்க, பிணை கோரி சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்திருந்த மனுவின் பிரதிவாதிகளாக சட்ட மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

