இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 500 பேர் கைது

240 0

இராணுவச் சேவையிலிருந்து முறையாக விலகாது விடுமுறை அறிவிக்காது சேவைக்கு சமூகமளிக்காத 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற படைவீரர்களை கைது செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, நேற்று வரையில் உயர் அதிகாரி ஒருவர், 313 இராணுவ உத்தியோகத்தர்கள், 133 கடற்படை உத்தியோகத்தர்கள் மற்றும் 11 விமானப்படை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

முறையாக விடுமுறை பெற்றுக் கொள்ளாது, இராணுவத்திலிருந்து முறையாக விலகாது சேவைக்கு சமூகமளிக்காத படையினருக்கு அண்மையில் பொது மன்னிப்பு காலம் ஒன்ற அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பொது மன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளாதவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.