எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து படையினரை அகற்றத் திட்டம்?

228 0

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆயுதப் படையினரை, அக்கடமைகளில் இருந்து அகற்றுவது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அண்மைய நாட்களில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பதிவான சம்பவங்களை மையப்படுத்தி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களும் முன் வைத்துள்ள கோரிக்கைக்கு அமைய இது குறித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து வருவதாக அறிய முடிகிறது.

இது குறித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்  எஸ். ஹெட்டி ஆரச்சியிடம் வினவிய போது,
இது குறித்து இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என தெரிவித்ததுடன் அடுத்து வரும் நாட்களில் அவ்வாறான ஒரு தீர்மானம் எட்டப்பட வாய்ப்புள்ளது என குறிப்பிட்டார்

இந் நிலையில் சிவில் நடவடிக்கைகள் அனைத்தையும் பொலிஸார் ஊடாக முன்னெடுக்கவும், அவசியம் ஏற்பட்டால் மட்டும் உதவிக்கு ஆயுதப் படையினரை அழைக்கும் வகையிலும் பொலிஸாருக்கு சிறப்பு ஆலோசனைகளை வழங்க  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து வருவதாக அறிய முடிகிறது.