லங்காபுர பிரதேச செயலகத்தின் பிரதான நிருவாக அதிகாரியின் கொலை : கணவர் கைது – கோடாரியும் மீட்பு

238 0

பொலன்னறுவை – லங்கா புர பிரதேச செயலகத்தின் பிரதான  நிருவாக அதிகாரியான 42 வயதான எம்.எல். யமுனா பத்மினி எனும்  பெண் ; வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அப்பெண்ணின் கணவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (4) அதிகாலை 2.30 மணியளவில் குறித்த கொலை  சம்பவம் பதிவாகியிருந்த நிலையில், புலஸ்திபுர பொலிஸார் முன்னெடுத்த விசாரணையின் அடிப்படையில் சந்தேகத்தில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கபில பண்டார எனும் இரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கோடாரி ஒன்றினையும் சந்தேக நபரால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

;குடிபோதையில் வந்த தன்னை திட்டியமை கொலைக்கான காரணம் என சந்தேக நபர் தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில், பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒஷான் ஹேவாவித்தாரனவின் மேற்பார்வியில் புலஸ்திபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.பி.கே. பத்திரண தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.