நாமல் ராஜபக்ஷவிற்கு டுபாய் வங்கியில் கணக்கு உண்டு-சந்திரிக்கா பண்டாரநாயக்க

231 0

நாமல் ராஜபக்ஷவிற்கு டுபாய் வங்கியில் கணக்கு உண்டு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ டுபாய் வங்கியில் மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்கள் வைப்பிலிடப்பட்டுள்ளமை குறித்த விபரங்களை காவல்துறையினர் திரட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இது தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு காவல்துறையினர் வங்கியிடம் கோரியுள்ள போதிலும், வங்கி தகவல்களை வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எவ்வித தகவல்களும் இன்றி நாமலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் சிலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர் எனவும், சில சம்பவங்கள் தொடர்பில் அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பிலான முக்கிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்