பிரேசில்: போலீசாரின் வேலைநிறுத்ததால் ஏற்பட்ட நிலைமையை சமாளிக்க அரசு படைகள் தீவிரம்

372 0

கடந்த சனிக்கிழமையன்று தங்களின் ஊதிய உயர்வு தொடர்பாக, பிரேசிலின் தென் கிழக்கு மாநிலமான எஸ்பிரெட்டோ சான்டூவில் போலீசார் மேற்கொண்ட வேலை நிறுத்தத்தால், அந்நாட்டு துருப்புக்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைப்பின் இருநூறு உறுப்பினர்கள் இம்மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

எஸ்பிரெட்டோ சாண்டோ மாநில தலைநகரான விட்டோரியாவில் சனிக்கிழமையன்று இந்த வேலைநிறுத்தம் துவங்கியதில் இருந்து 51 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு முந்தைய 5 வாரங்களில் நான்கு கொலை சம்பவங்களே நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசார் வேலைநிறுத்தத்திற்கு பிறகு ஏற்பட்ட வன்முறையால் பல டஜன் கடைகள் சூறையாடப்பட்டுள்ளதால், பல வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

நிலைமையை சமாளிக்க விட்டோரியாவில் திங்களன்று அரசு படைகள் வருகை புரிந்துள்ளன. இந்நகர வீதிகளில் கண்காணிப்பு ரோந்து பணியை இப்படைகள் துவக்கியுள்ளன. முன்னதாக, ஊதிய உயர்வு கோரி உள்ளூர் போலீசார் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.