வெளிநாடு செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு திட்டம்.

204 0

வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு திட்டம் ஒன்றை முன்மொழிவதற்கான சட்ட வரைவுகள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள இதனை தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

வெளிநாட்டு பணியாளர்களால் நாட்டின் அந்நிய செலாவணி அதிகரித்துள்ளது.

2016ஆம் ஆண்டு 261 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வருவாயாக கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்தநிலையில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு, ஓய்வுதிய திட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.