ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

39 0

ஜூலை 11-ம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் பற்றிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் 4-ம் தேதி விசாரிக்கப்படுகிறது.

ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த சண்முகம் கடந்த 23-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் நீதிபதிகளின் உத்தரவை மீறியதாக சண்முகம் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் இந்த மனுவை 4-ம் தேதி விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.