ரஷியா மீது பொருளாதார தடை- அமெரிக்காவுக்கு சீன அதிபர் கண்டனம்

147 0

இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள பிரிக்ஸ் அமைப்பின் வர்த்தக மன்ற கூட்டத்தை காணொலி முறையில் சீனா நடத்துகிறது. இதில் தொடக்க உரையாற்றிய சீன அதிபர் ஜின்பிங், உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘பொருளாதார தடைகள் பூமராங் போன்றவை. இருபுறமும் கூர்மையான வாளுக்கு ஒப்பானவை. சர்வதேச நிதி அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் உலகப் பொருளாதாரத்தை அரசியலாக்குபவர்கள் மற்றும் வேண்டுமென்றே பொருளாதாரத் தடைகளை விதிப்பவர்கள் இறுதியில் மற்றவர்களுக்கும், தங்களுக்கும் தீங்கு விளைவிப்பார்கள்.

அத்துடன் உலக மக்களுக்கு பேரழிவுகளை ஏற்படுத்துவார்கள்’ என்று சாடினார். சர்வதேச மேலாதிக்கம், குழு அரசியல் மற்றும் கூட்டு மோதல்கள் அனைத்தும் அமைதியையோ, நிலைத்தன்மையையோ தருவதில்லை எனக்கூறிய ஜின்பிங், மாறாக போரையும், மோதலையுமே ஏற்படுத்துவதை வரலாறு காட்டுவதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், பிரேசில் அதிபர் போல்சொனாரோ உள்ளிட்டோரும் உரையாற்றுவார்கள் என கூறப்பட்டு உள்ளது.