பொது நீச்சல் குளங்களில் புர்கினி நீச்சல் உடை அணிய தடை: பிரான்ஸ் கோர்ட்டு அதிரடி

83 0

பிரான்ஸ் நாட்டில் கிரினொபெல் நகரில் பொது நீச்சல் குளங்களை பயன்படுத்த பிகினி என்ற குறிப்பிட்ட உடையை அணிய வேண்டுமென்ற விதி உள்ளது. ஆனால், பொதுநீச்சல் குளங்களை இஸ்லாமிய மத பெண்கள் பயன்படுத்தும் வகையில் புர்கானி என்ற உடையும் அனுமதிக்கப்பட்டது. புர்கானி என்பது பர்தா மற்றும் பிகினி என்ற வார்த்தைகளின் கூட்டு சொல்லாக கூறப்படுகிறது.

புர்கினி என்பது உடல் முழுவதையும் மூடி முகம் மட்டும் தெரியும் வகையிலான உடையாகும். இந்த உடைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொது இடங்களில் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த உடை உள்ளதாக எதிர்ப்பு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக கிரினொபெலில் உள்ள கீழ் கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது.

அதில், பொது நீச்சல் குளங்களில் புர்கினி அணிந்து குளிக்க தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பிரான்ஸ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில், நாடு முழுவதும் பொது நீச்சல் குளங்களில் புர்கினி அணிய தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதேபோல், கிரினொபெலில் புர்கினி அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனவும் கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது.