பைசர் தடுப்பூசி கொடுத்து மியன்மாரிடமிருந்து அரிசியைப் பெற அரசாங்கம் அவதானம்

154 0

நாட்டில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் பின்னர், தற்போதும் எஞ்சியுள்ள சுமார் 6 இலட்சம் பைசர் தடுப்பூசியை  மியன்மாருக்கு வழங்கி, அதற்கு பதிலாக அங்கிருந்து அரிசியை பெற்றுக்கொள்வது தொடர்பில் அரசாங்கத்தின் அவதானம் திரும்பியுள்ளது.

இலங்கையிடமிருந்து பைசர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள மியன்மார் விருப்பம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சின்   மருத்துவ தொழில் நுப சேவைகள் பிரிவின் பணிப்பாளரும் மருத்துவ உதவிகள் தொடர்பிலான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இருப்பில் உள்ள இந்த 6 இலட்சம் பைசர் தடுப்பூசிகலும் சில மாதங்களில் காலாவதியாகும் நிலியில் உள்ளதால் அவற்றை மியன்மாருக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டது.

இவ்வாறான நிலையிலேயே, மியன்மாரிடமிருந்து அரிசியை கொள்வனவு செய்வது குறித்து அரசாங்கத்தின் அவதானம் திரும்பியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.