பேர்லின் TU பல்கலைக்கழக வளாகத்தில் ஈழத்தமிழர்கள் மீது நடைபெறும் கட்டமைப்புசார் இனவழிப்பு தொடர்பான தகவல் மையம்

140 0

பேர்லின் உயர்கல்வி மாணவர் அமைப்பினால் TU பல்கலைக்கழக வளாகத்தில் ஈழத்தமிழர்கள் மீது நடைபெறும் கட்டமைப்புசார் இனவழிப்பு தொடர்பான தகவல் மையம் முன்னெடுக்கப்பட்டது.

சென்ற வாரம் இரண்டு நாட்களாக நடைபெற்ற இத் தகவல் மைய நிகழ்வில் குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான கல்வி தரப்படுத்தல் தொடர்பாக கண்காட்சி வைக்கப்பட்டு மாணவர்களால் மேலதிக விளக்கங்கள் வழங்கப்பட்டது. அத்தோடு யேர்மனிய மொழியில் துண்டுப்பிரசுமும் வழங்கப்பட்டது.

இவ் நிகழ்வில் சக வேற்றின உயர்கல்வி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதோடு ஈழத்தமிழர்களுக்கான தமது தோழமையை தெரிவித்தனர் .