கிளிநொச்சி மாவட்டத்திற்கான மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

161 0

கிளிநொச்சி மாவட்டத்திற்கான மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட விவசாய பணிப்பாளர் செல்வராஜா தலைமையில் குறித்த கலந்துரையாடல் நேரடியாகவும் சூம் தொழில் நுட்பம் ஊடாகவும் இன்று பகல் நடைபெற்றது.

கலந்துரையாடப்பட்ட விடயங்கள்

கிளிநொச்சி மாவட்டத்திற்கான மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (Photos)

 

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் குறிப்பாக இரசாயன உரம் கிடைக்கப் பெறாமை ,விவசாய நடவடிக்கைகள் வீட்டுத்தோட்ட செய்கைகள் மற்றும் உணவு உற்பத்தி தொடர்பிலும், தொடர்ந்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அக்கராயன்குளம் கமநல சேவை நிலையத்திலிருந்து யுரியா உரம் எடுக்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (Photos)