யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடமும், யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றமும் புரிந்துணர்வு உடன்படிக்கை

234 0

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடமும், யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றமும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் மூலம் இணைந்து கொண்டுள்ளன.

இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று(8) முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட சபா மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த உடன்படிக்கையின் பிரகாரம் யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றம், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட மாணவர்கள், விரிவுரையளர்கள் போன்றவர்களுக்கும் பல்வேறு வழிகளில் நன்மையினை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடன்படிக்கையின் சாதக அம்சங்கள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடமும், யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றமும் புரிந்துணர்வு உடன்படிக்கை(Photo)

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் வாயிலாக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடமானது யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் நிலைபேறான அபிவிருத்திக்கு பாரிய அளவில் பங்களிப்பினை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் அங்கத்தவர்களுக்கு தேவையான பயிற்சிகள், பயிற்சிப் பட்டறைகள், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், போன்றனவற்றுக்கு வளவாளர்களாக முகாமைத்துவ வணிக பீடத்தை சேர்ந்த விரிவுரையாளர்கள் தொழிற்படுதலுடன் கொள்கைகள் மற்றும் செயற்திட்டங்களை வகுப்பதில் உதவுதல்.

 

 

 

 

 

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடமும், யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றமும் புரிந்துணர்வு உடன்படிக்கை(Photo)

 

குறுகியகால டிப்ளோமா கற்கைநெறி மற்றும் சான்றிதழ் கற்கைகளினை அறிமுகப்படுத்துதல் மூலமாக அங்கத்தவர்களின் தொழில் சார் அறிவினை பெருக்கி கொள்ள உதவுதல். தொமிற்துறை நடவடிக்கைகளில் ஏற்படுகின்ற நெருக்கடி நிலையினை சிறந்த முறையில் முகாமை செய்வதற்குரிய தந்திரோபாய ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்குதல்.

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பங்குதாரர்களாக செயற்படுதல் வணிகத்தின் வளர்ச்சி ஆராய்ச்சிகள் ஆலோசனைகள் முதன்மையான இடத்தினை வகிக்கின்றது. இவ்வாறான ஆலோசனைகள் தேவைப்படும் போது முகாமைத்துவக்கற்கைகள் வணிக பீடத்தின் நிபுணர் குழு தேவையான ஆலோசனைகளை வணிக குழாமுக்கு வழங்குவதன் மூலம் தொழிற்துறையின் செயற்பாட்டினை மேம்படுத்த உதவும்.

 

மாணவர்களுக்கான வாய்ப்புக்கள்

 

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடமும், யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றமும் புரிந்துணர்வு உடன்படிக்கை(Photo)

அதேபோன்று இவ் உடன்படிக்கையின் மூலம் மாணவர் சமூகம் பல்வேறு வழிகளில் நன்மையினை பெற்றுகொள்ள வாய்ப்புக்கள் உள்ளது. மாணவர்களுக்கு தமது பட்டப்படிப்பின் ஓர் அங்கமாக அமைந்துள்ள உள்ளகப் பயிற்சிக்கான வாய்ப்பினை பெற்று கொள்ளல். மாணவர்களுக்கு பகுதி-நேர வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்ளுதலுக்கு உதவுதல்.

யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றம் செயற்படுத்தும் செயற்திட்டங்களில் மாணவர்கள் நேரடியாக பங்குபற்றி பயிற்சிகளை பெற்றுக்கொள்வதன் வழியாக மாணவர்கள் தங்கள் நடைமுறை அறிவினை விருத்தி செய்துகொள்வதுடன் விழிப்புணர்வையும் பெற்றுக்கொள்வர்.