6 மாத கால விடுதலை கோரி நளினி மனு

414 0

ரஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நளினி, 6 மாத கால விடுதலை கோரி, சிறை கண்காணிப்பாளர் ஊடாக இந்திய சிறைத்துறை தலைவருக்கு மனு ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

நளினியின் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில்;, அதற்காகவே இந்த விடுதலையை கோரியுள்ளதாக நளினியின் சட்டத்தரணி இந்திய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

25 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவிக்கும் தங்களை விடுவிக்குமாறு நளினி-முருகன் உள்ளிட்ட கைதிகள் கோரிவருகின்றனர்.

இதனிடையே, ”ராஜீவ் கொலையும் மறைக்கப்பட்ட உண்மைகளும், பிரியங்கா- நளினி சந்திப்பும்” என்ற பெயரில் நளினி பல்வேறு சம்பவங்களை தொகுத்து எழுதிய சுயசரிதை புத்தகம் அண்மையில் தமிழில் வெளியிடப்பட்டது.

நளினி எழுதிய இந்த சுய சரிதை புத்தகம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு டெல்லி, சென்னை, லண்டன் ஆகிய நகரங்களில் வெளியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெறும் நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்ய தமிழக அரசு 2014ஆம் ஆண்டு தீர்மானம் ஒன்றை மேற்கொண்டது.

இதுதொடர்பான வழக்கு இந்திய உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவருகின்றது.

இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை எதிர்வரும் 7 அம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.