அவுஸ்திரேலியா வுக்கு படகில் தப்பிச் செல்ல முயன்றவர் பரிதாபமாக பலி

131 0

திருகோணமலை நிலாவெளி பகதியிலிருந்து சட்டவிரோதமாக  அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் கடந்த 23 ஆம் திகதி செல்ல முற்பட்டவர்கள் கடற்படையினரை கண்டு தப்பி ஓட முற்பட்ட மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியை சேர்ந்த ஒருவர் தவறிவீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் மட்டு பேதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 31ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .

களுவாஞ்சிக்குடி பழம் தோட்டம் முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய சிவலிங்கம் எரம்பமூர்த்தி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

கடந்த மே மாதம் 23 ஆம் திகதி திருகோணமலை நிலாவெளி கடல் பகுதியிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் செல்வதற்காக நிலாவெளி கடற்கரையில் இரவு 67 பேர் காத்திருந்தபோது கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அந்த பகுதியை கடற்படையினர் பொலிசாhரும் இணைந்து சுற்றிவழைத்தனர்.

இதன்போது அவுஸ்திரேலியாக்கு செல்வதற்காக காத்திருந்தவர்கள்  ; கடற்படையினரை கண்டு அங்கிருந்து தப்பி ஓட முற்பட்ட போது அதில் ஒருவர் தவறிவிழுந்து தலையில் அடிபட்டு படுகாயமடைந்த நிலையில் கடந்த 24 ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்;டார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 31 ஆம் திகதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்..

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது