வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டம் – தினேஸ் குணவர்தன

316 0

அரச ஊழியர்கள் வெள்ளிக்கிழமையை ‘வீட்டிலிருந்து வேலை செய்யும் நாளாக’ மாற்றுவதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள்,  மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரசாங்க உத்தியோகத்தர்கள் ; பணிக்கு சமுகமளிக்க வேண்டிய நாட்களின் எண்ணிக்கை வாரத்தில் 4 நாட்களாக குறைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பான பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்து கொள்கை ரீதியான தீர்மானமொன்றை எடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (5) இடம்பெற்ற நிகழ்வில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.