சட்டத்தரணி சேனக பெரேராவிடம் சிஐடி விசாரணை |

286 0

ஸ்ரீலங்கா மக்கள் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் மனித உரிமை செயற்பாட்டளருமான சட்டத்தரணி சேனக பெரேரா இன்று சிஐடியினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

என்னை ஏன் அழைத்தார்கள் என்பது இதுவரை தெரியவில்லை ; உள்ளே சென்ற பின்னரே காரணம் தெரியும் என அவர் சிஐடி அலுவலகத்திற்கு செல்லுமுன்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

என்னை ஏன் அழைத்துள்ளனர் என்ற காரணத்தை அவர்கள் முன்கூட்டியே தெரிவித்திருந்தால் நான் தயாராக வந்திருப்பேன் என அவர் தெரிவித்தார்.

நான் மக்களிற்காகவும் அவர்களின் பிரச்சினைகளிற்காகவும் அரகலயவிற்காகவும் குரல் கொடுத்தேன் எனதெரிவித்த சேனகபெரேரா நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை,எங்களை பழிவாங்க அரகலய தான் காரணம் என்றால் அது துரதிஸ்டவசமானது எனவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என கோரி  காலிமுகத்திடலில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களில் முக்கிய பங்களிப்பை சேனக பெரேரா வழங்கிவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.