இராணுவத்தளபதி கடற்படை தலைமையகத்திற்கு விஜயம்

284 0

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே 06 ஆம் திகதி திங்கட்கிழமை கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்து , கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்து கலந்துரையாடினார்.

கடற்படை தலைமையகத்திற்குச் சென்ற இராணுவத்தளபதிக்கு கடற்படைப் பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) ரியர் அட்மிரல் பிரசாத் காரியப்பெருமவினால் வரவேற்பளிக்கப்பட்டது.

அதனையடுத்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன புதிய இராணுவத் தளபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இக்கலந்துரையாடலில் தேசிய பாதுகாப்பு, தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் ஏனைய பொதுவான விடயங்களில் இராணுவத்தின் எதிர்காலப் பணிகள் குறித்த கருத்துக்கள் பகிரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.