நாட்டில் புதுப்பிக்கத்தக்க வலு சக்தி துறையை மேம்மடுத்துவதற்கான உடனடி மற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர , இலங்கைக்கான நியுசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்பல்டனுடன் கலந்துரையாடியுள்ளார்.
இவ்விருவருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று 30 ஆம் திகதி ; திங்கட்கிழமை வலு சக்தி அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் காஞ்சன விஜேசேகர , ‘ நியூசிலாந்துக்கான உயர் ஸ்தானிகருடன் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சில் சந்திப்பொன்று இடம்பெற்றது
இந்த சந்திப்பில் தற்போதைய நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் , புதுப்பிக்கத்தக்க மற்றும் எரிசக்தி துறைகளுக்கான உடனடி மற்றும் நீண்ட கால திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

