ஜூன் மாத எரிபொருள் இறக்குமதிக்கு 554 மில்லியன் டொலர் தேவை!

255 0

எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான டொலர் தேவை தொடர்பில் மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ஜூன் மாதத்திற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு 554 மில்லியன் டொலர் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான நிதியில் 100 மில்லியன் டொலர் இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்ளப்படும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்தியாவிடமிருந்து மேலும் 500 மில்லியன் டொலரை புதிய கடன் திட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் மத்திய வங்கி ஆளுனருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பெற்றோலியப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக பல தரப்பட்ட பேச்சுவார்த்தைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.