கொழும்பை தூய்மையான நகராக்கியது கோட்டாபய

314 0

கொழும்பு நகரத்தை முறையாக தூய்மையான நகராக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக மேம்பாடு மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க இந்த கருத்தை வௌியிட்டார். ஆசிய நாடுகள் மத்தியில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக கொழும்பு நகரம் தூய்மையான நகராக திகழ்வதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இன்று (03) ரிகில்லகஸ்கட பேரூந்து நிலையத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார். கொழும்பு நகரத்தின் அமைப்பில் காணப்படும் இந்த தன்மையை முழுநாட்டிற்கும் கொண்டு செல்ல வேண்டும்.

கழிவு காகிதமொன்றையேனும் கீழே இடாது நகரத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கும், அதன்பொருட்டு நகர மக்கள் தயாராக இருப்பார்களாயின் தாம் அதற்கு எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்க தயார் என அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிட்டார்.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆசிய நாடுகளின் நகரங்கள் குப்பை கூழங்கள் நிறைந்ததாகவே உள்ளன. இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ் போன்ற சில நாடுகளின் தலைநகரங்கள் பெரிதும் தூய்மையற்ற நகரங்களாகவே இருக்கின்றன. ஆனால், இந்த நிலைமையில் இருந்து முன்னோக்கி செல்ல வேண்டும். இதன்காரணமாகவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட கவனம் செலுத்தி அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.