இலிம்ப பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

306 0

பாணந்துறை – இரத்தினபுரி வீதியில் ஹொரண, இலிம்ப பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் இன்று காலை 7.55 மணியளவில் காரில் அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாதுக்கை பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

உயிரிழந்தவர் நிதி நிறுவனமொன்றில் நிறைவேற்று அதிகாரியாக பணி புரியக் கூடியவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹொரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.