உணவை ஆயுதமாக்கும் ரஷ்யா? – 2 கோடி டன்கள் கோதுமை உக்ரைனில் தடுப்பு: சமரசம் செய்யும் ஐ.நா.

134 0

 சமையல் எண்ணெய், கோதுமை என உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இது செயற்கையான தட்டுப்பாடு எனவும் இதன் பின்னணியில் ரஷ்யா இருப்பதாகவும், உக்ரைன் போரில் ரஷ்யா உணவை ஆயுமாக்கியுள்ளதாகவும் அமெரிக்கா விமர்சித்துள்ளது. உக்ரைனில் 2 கோடி டன்கள் கோதுமையை ரஷ்யா தடுத்துள்ளதாக கூறியுள்ளது. இதனையடுத்து சமரச முயற்சியில் ஐ.நா. இறங்கியுள்ளது.

உலகம் முழுவதும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பல ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு சமையல் எண்ணெய் ரேஷன் முறையில் கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பாதிப்பும் இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளிலும் கடுமையாக எதிரொலிக்கிறது. மலேசியோ, இந்தோனேஷியா என பாமாயில் உற்பத்தி செய்யும் நாடுகளிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சமையல் எண்ணெயை தொடர்ந்து உலக அளவில் கோதுமைக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி இறுதியில் ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக உலகில் இந்தியாவின் கோதுமைக்கான தேவை மேலும் அதிகரித்தது. கடந்த பிப்ரவரி மாத பிற்பகுதியில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கியதில் இருந்து கருங்கடல் பகுதியில் இருந்து கோதுமை ஏற்றுமதி குறைந்ததை அடுத்து, உலகளவில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.