வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அப்பதவியில் தொடர்ந்தும் வைத்திருந்தால் இலங்கைக்கு பெரும் ஆபத்து ஏற்படும்- தினேஸ் குணவர்தன

318 0

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அப்பதவியில் தொடர்ந்தும் வைத்திருந்தால் இலங்கைக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தினேஸ் குணவர்தன ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த தினேஸ் குணவர்தன, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து உடனடியாக நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அப்பதவியில் தொடர்ந்தும் வைத்திருந்தால் இலங்கைக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சர்வதேச பங்களிப்புடன் போர்க் குற்ற விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பிக்காவிட்டால் வடக்கில் புறம்பான போர்க் குற்ற விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருந்ததாகவும், இதனால் ஜனாதிபதியின் கூற்றை வடமாகாண முதலமைச்சர் உதாசீனப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நீதிமன்றத்தை அமைக்காவிட்டாலும் அல்லது சர்வதேச நீதிபதிகளை உள்வாங்காவிட்டாலும் போரின்போது இடம்பெற்ற குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு வடக்கில் புறம்பான ஒரு விசாரணை ஒன்றை ஆரம்பிப்பதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்துள்ளார்.

சட்டத்தின் ஊடாக கேட்டதை தற்போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் புறம்பாக கேட்பதாகவும்,  இவ்வாறான முதலமைச்சர் ஒருவரை பதவியில் வைத்திருப்பதானது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று தினேஸ் குணவர்தன சுட்டிக்காட்டினார்.