வவுனியா நகரசபையின் பொதுப்பூங்கா வடக்கு மாகாண முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

499 0

வவுனியா நகரசபையின் பொதுப்பூங்கா வடக்கு மாகாண முதலமைச்சரினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நெல்சிப் திட்டத்தினூடாக 70 இலட்சம் ரூபாவும் நகரசபை நிதியில் 20 இலட்சம் ரூபாவுமாக 90 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட இப் பூங்காவானது வவுனியாவின் முக்கிய தேவையாக காணப்பட்ட பொழுதுபோக்கு அம்சத்திற்கு வழிவகுத்துள்ளது.

வவுனியா நகரசபை செயலாளர் இ.தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கே.கே.மஸ்தான், வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி லிங்கநாதன், செ.மயூரன், எம்.தியாகராசா, ஆர்.இந்திரராஜா, ஏ.ஜெயதிலக, வவுனியா மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் காஞ்சன குமார, மற்றும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுர்தீனின் இணைப்பாளர்கள, வட மாகாணசபை உயர் அதிகாரிகள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை வட மாகாண முதலமைச்சர் வவுனியா குருமண்காட்டில் நகரசபையின் 30 இலட்சம் ரூபா செல்வில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையின் கட்டிடம், சிங்கள பிரதேசத்திற்கான கலாசார மண்டபம், சிதம்பரபுரம் பழினி முருகன் ஆலயப்பகுதியில் அமைக்கப்பட்ட சுற்றுலா களம், கல்நாட்டியகுளம் பகுதியில் அமைக்கப்பட்ட இயற்கை பூங்கா, ஓமந்தையில் அமைக்கப்பட்ட வன்னியூற்று பெண்களின் உணவகம், செட்டிகுளம் பொது சந்தை கட்டிடத்தொகுதி என்பவற்றையும் திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.