மகிந்த ராஜபக்ச இறந்தகாலத்தை மறந்து விட்டார் – சரத்பொன்சேகா

246 0

மகிந்த ராஜபக்ச இறந்தகாலத்தை மறந்து விட்டார். அவர் ஆட்சியில் மக்கள் அடிக்கப்படவில்லை சுடப்பட்டனர் என அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்தார்.

நேற்றைய தினம் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வழங்கும் போதே அவர் இதனைக் கூறினார். மேலும் தொடர்ந்த அவர்,நல்லாட்சி ஆட்சியில் போராட்டம் செய்யும் மக்கள் அடித்து விரட்டப்படுகின்றார்கள் இது அராஜகம் என மகிந்த தெரிவித்துள்ளார்.

ஆனால் அதில் எந்த வித நியாயமும் இல்லை அவருடைய ஆட்சி காலத்தில் மக்கள் அடிக்கப்பட வில்லை ஆனால் சுடப்பட்டனர் என்பதை மறந்து விட்டார்.

மேலும் புலனாய்வுத் துறையினரையும், இராணுவத்தையும் பணிநீக்கம் செய்வது பொறுத்தமற்றது என மகிந்த தெரிவித்துள்ளார். அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டதாலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவருடைய ஆட்சி காலத்தில் இராணுவ வீரர்களை தண்டித்ததையும், மண்டியிட்டு வணங்கச் சொன்னதையும் மறந்து விட்டு இப்போது உளறிக் கொண்டு இருக்கின்றார்.

அதே போன்று கருணா அம்மான் என்பவர் பிரச்சினைக்குரிய நபர். பிரபாகருடன் இருக்க முடியாத காரணத்தினாலேயே அங்கிருந்து வந்தார்.இப்போது இவர்களுக்கு அவரைப்போன்ற பிரச்சினைக்குரிய நபர்களே தேவைப்படுகின்றார்கள் எனவும் பொன்சேகா குற்றச்சாட்டு ஒன்றினையும் முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.