கச்சத்தீவு விடயம் – தமிழக சட்டசபையில் வாத விவாதம்

242 0

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டமை தொடர்பில் தமிழக சட்ட சபையில் நேற்றையதினம் விவாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – இந்திய கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் முகம் கொடுக்கும் அசாதாரண நிலைமை தொடர்பில், தமிழக எதிர்கட்சித் தலைவர் எம்.கே. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இதன்நிமித்தம் ஆழ்கடற்தொழிலை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்துக்கு என்னானது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கச்சத்தீவை திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்புதலுடன் இலங்கைக்கு வழங்கியதை அடுத்தே இந்த பிரச்சினை தோற்றம் பெற்றதாக சுட்டிக்காட்டினார்.

மேலும் கச்சத்தீவு மீளப் பெற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் எடுத்த முயற்சிகள் குறித்தும் விபரித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட பிரதி எதிர்கட்சித் தலைவர் துரைமுருகன், கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டமை குறித்த திராவிட முன்னேற்றக் கழகம் அறிந்திருக்கவில்லை என்றார்.

மேலும் அந்த நாட்களில் இந்திய பிரதமராக இருந்த வாஜ்பாயிற்கு, கச்சத்தீவை இலங்கைக்கு வழங்குவதில் எதிர்ப்பு இல்லை என்று ஒப்புதல் அளித்த கடிதம் ஒன்றை ஜெயலலிதா ஜெயராம் அனுப்பி வைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.