யாழ்ப்பாணத்தில் கல்விப் பாரம்பரியம் மீண்டும் ஏற்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாக்க கேட்டுக்கொண்டார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பொறியியல் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம் மற்றும், கலைப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மாணவர்களை கௌhரவிக்கும் நிகழ்வில் உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாக்க இவ்வாறு குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் கல்விகற்றவர்களே வைத்தியர்களாகவும், பொறியியலாளர்களாகவும் முன்னர் பதவி வகித்த காலம் காணப்பட்டது.
எனினும், இந்நிலைமை தற்போது மாற்றமடைந்துள்ளதாகவும், மீண்டும் அதே நிலையை யாழ்ப்பாண மாணவர்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மாணவர்கள் குழுக்களாக இயங்கி சிறைச்சாலைக்கு செல்வதை தவிர்த்து, பாடசாலைகளுக்கு சென்று கல்வியை கற்க வேண்டும் எனவும், யாழ்ப்பாண மாணவர்கள் கல்வியை கற்று நாட்டுக்கும் மக்களுக்குமன்றி சர்வதேச ரீதியிலும் கல்வியில் சிறந்து கடமையாற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அகில இலங்கை ரீதியில் மாணவர்கள் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்றுள்ளபோதும் மாணவர்களின் ஆங்கில அறிவு குறைவாக காணப்படுகின்ற காரணத்தால் பல்கலைக்கழகத்துக்கு நுழைவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஆங்கில அறிவை விருத்தி செய்ய தரமான ஆசிரியரை நியமித்து ஆங்கில கல்வியை கற்பிப்பதற்குரிய செலவை தன்னால் வழங்க முடியும் எனவும் யாழ்ப்பாண மாவட்டட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாக்க தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் பொறியியல் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பெற்ற சுன்னாம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மாணவன் கனகசுந்தரம் யதுர்சனும், கலைப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மானிப்பாய் இந்துக் கல்லூரி மாணவன் பத்மநாதன் குருபரேசனும், பலாலி படைத்தலைமையகத்தில் வைத்து இன்று கௌhரவிக்கப்பட்டனர்.
மாணவர்களுக்கு நூல்கள் மற்றும் மடிக்கணனிகள் பரிசாக வழங்கப்பட்டனஇந்நிகழ்வில், மானிப்பாய் மற்றும் சுன்னாம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அதிபரிகள், ஆசிரியர்கள், பெற்றோர், உயர்தர வகுப்பு மாணவர்கள் மற்றும் படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

