நேற்று பாபநாசம் அணை நீர்மட்டம் 47.70 அடியாக இருந்தது. இன்று காலை இந்த அணை நீர்மட்டம் மேலும் ஒரு அடி உயர்ந்து 48.30 அடியாக அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்தது. அணைப்பகுதியில் பெய்த மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. பிரதான பாசன அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மிக குறைவான அளவான 20 அடி வரை சென்றுவிட்டது.
பின்னர் மழை காரணமாக அணை நீர்மட்டம் உயர தொடங்கியது. நேற்று இந்த அணை நீர்மட்டம் 47.70 அடியாக இருந்தது. இன்று காலை இந்த அணை நீர்மட்டம் மேலும் ஒரு அடி உயர்ந்து 48.30 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 358 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 104.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதேபோல் நேற்று 78.38 அடியாக இருந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 79.72 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று 48 அடியாக இருந்த மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று 48.58 அடியாக உயர்ந்து உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 256 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதே போன்று மற்ற அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. நேற்று அணைப்பகுதி உள்ளிட்ட மற்ற எந்த இடங்களிலும் மழை இல்லை.

